Thursday, February 27, 2014

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சஷ்டி யாகம்: திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

கண்ணாடிக்கு அபிஷேகம் : ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வானை திருக்கல்யாணம்: சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு!:கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

மும்மூர்த்தி முருகன்!:முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

பக்தர்கள் செல்ல முடியாத கோபுர வாசல்! : திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

நான்கு உற்சவர்கள் : பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

சந்தனமலை : முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

குரு பெயர்ச்சிக்கு இங்கே போங்க! :திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

இரண்டு முருகன் : சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம் :மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கிறார்கள்.

பஞ்சலிங்க தரிசனம்:முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

கங்கை பூஜை : தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
மூலவர்:சுப்பிரமணியசுவாமி
உற்சவர்:சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: -
தீர்த்தம்:சரவணபொய்கை
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திருச்செந்தூர்
மாவட்டம்: தூத்துக்குடி
மாநிலம்: தமிழ்நாடு                         

முருகன் என் நண்பன்

வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டு இருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் பிரபலமானது. சமிஸ்கிருத நூல்களில் ஸ்கந்தனைப் பற்றிக் கூறும்போது அவரை ஒரு பிரும்மச்சாரி அல்லது தேவக் கடவுளான தேவசேனாவை (தெய்வானை) மணந்தவர் என்று மட்டுமே கூறுகின்றது. அதற்கு மாறாக பல தமிழ் நூல்களில் வள்ளியே முருகனின் கணவர் என்று கூறி வந்துள்ளது.
இது பல காலமாக திராவிடர்களினால் நம்பப்பட்டு வந்தக் கதை ஆகும். பண்டைய இன தமிழ் மக்கள் இதுதான் உண்மை என நம்புவதற்குக் காரணம் 1350 ஆம் ஆண்டில் காஞ்சீபுரத்தில் இயற்றியதாகக் கூறப்படும் குச்சியப்பா என்பவர் எழுதி உள்ள கந்த புராணத்தின் 267 செய்யுளில் காணப்படும் கடைசி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலம் என்பதே. அது என்ன?
தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை. அந்த மலையின் அடிவாரத்தில்தான் நம்பி என்ற வேடன் இருந்தான். அவனுக்குப் பிறந்த அனைத்துக் குழைந்தைகளுமே ஆண் குழந்தைகளாக இருந்தன. அதனால் அவன் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஏங்கிக் கொண்டு இருந்தான். அந்த மலையின் அடிவாரத்தில் சிலமுகி எனும் துறவி இருந்தார். ஒருநாள் அவர் எதிரில் அழகான அரபு தேசத்து மான் ஒன்று ஓடியது. அதன் உடல் அழகைக் கண்டு காம இச்சைக் கொண்டு அவர் அதைப் பார்க்க, துறவி பார்த்த காமக்கண்ணினால் அந்த மான் கர்ப்பம் அடைந்தது ( துறவிகள் பார்வை மூலமே காமத்தை செலுத்த முடியும் என்பது ஒரு நம்பிக்கை.
நமது இதிகாசங்களில் பல சம்பவங்கள் அவ்வாறு உள்ளன. இது என்னுடைய செய்தி - சாந்திப்பிரியா). இவ்வாறாக கர்ப்பம் அடைந்த மான் காலப்போக்கில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தப் பின் அதை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டது. ஒரு நாள் அந்த இடத்தின் அருகில் கிழங்குகளை எடுக்க வந்த வேடவர் பெண்கள் அந்தக் குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை எடுத்துக் கொண்டு போய் வேடர்களின் தலைவரான நம்பியிடம் கொடுக்க அந்த தம்பதியினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து அந்தக் குழந்தையை தம் குழந்தையாகவே வளர்க்கலாயினர். அதற்கு வள்ளி எனப் பெயர் சூட்டினார்கள்.
வள்ளிக்கு பன்னிரண்டு வயதானபோது வேடர் குல வழக்கப்படி அவளை நெல் கதிர்கள் பயிரிடப்பட்டு இருந்த வயலுக்குச் சென்று அங்கு உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தப் பரணில் அமர்ந்து கொண்டு நெற் கதிர்களை பறித்து உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் துரத்தும் பணியில் அமர்த்தினார்கள். அப்போது ஒரு நாள் அங்கு எதேற்சையாக வந்த நாரதர் அவளது அழகைக் கண்டு வியந்து, உடனே தணிகை மலைக்கு கிளம்பிச் சென்று முருகரிடம் அவள் அழகை பற்றி விவரித்தார். அது மட்டும் அல்ல வேடவ இனத்தினரும், வள்ளியும் அவர் மீது (முருகன் எனும் கடவுள் மீது) வைத்து இருந்த பக்தியைக் குறித்துப் பேசினார்.
அதைக் கேட்ட முருகனும் தன் உருவை ஒரு வேடர் போல மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு சென்று வள்ளியுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு ஆவலுடன் நெருங்கிப் பழகி அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டார்.
ஒருநாள் எப்போதும் போல முருகன் வள்ளியை சந்திக்கச் சென்றபோது, வேடன் நம்பி மாவுத் தூள், தேன், வள்ளிக் கிழங்கு, மாம்பழம் மற்றும் காட்டுப் பசுவின் பால் முதலிய உணவைக் கொண்டு வந்தான். தூரத்தில் இருந்தே அவன் வருவதைக் கண்ட முருகன் உடனே தன்னை ஒரு மரம் போல உரு மாற்றிக் கொண்டார். உணவை வல்லிக்குத் தந்தப் பின் நம்பியும் மற்றவர்களும் அங்கிருந்து கிளம்பிச் சென்றப் பின் மீண்டும் தன்னை தன் உருவை வேடனாக மாற்றிக் கொண்ட முருகன் வள்ளியிடம் சென்று தான் அவளை தான் காதலிப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட வள்ளி திடுக்கிட்டுப் போய் தலை குனிந்தபடிக் 'கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு வேடவப் பெண்ணை அவர் விரும்புவது முறை அல்ல' என்றாள்.
அப்போது தூரத்தில் பாடல்களைப் பாடிக்க் கொண்டும் நாட்டியம் ஆடிக் கொண்டு வந்து கொண்டு இருந்த கும்பலைக் கண்டு பயந்து போனவள் ' வந்து கொண்டு இருப்பவர்கள் வேடர்கள், கோபக்காரர்கள், உடனே சென்று விடுங்கள்' என்று முருகனிடம் கூற உடனே முருகனும் தன்னை ஒரு சாமியார் போன்ற ஒரு வயதான கிழவர் உருவில் மாற்றிக் கொண்டார். வந்தவர்களும் அவரை ஒரு சிவனடியார் என நினைத்து அவரை வணங்கிவிட்டுச் சென்று விட்டார்கள்.
Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl
Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl.
அவர்கள் சென்றப் பின் அவர் வள்ளியிடம் தனக்கு தேனும், தினையும் கலந்த உணவை தருமாறுக் கேட்க அவளும் அவருக்கு அதை தந்தாள். அவர் அதை உண்டதும் பக்கத்தில் இருந்த ஒரு குளத்தின் அருகில் அவளை அழைத்துக் கொண்டு சென்று தன் இரு கைகளினாலும் தண்ணீரை எடுத்துக் கொடுத்து அவளைக் குடிக்கச் சொன்னார். 'தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தனது காதல் பசியையும் தீர்க்க வேண்டும்' என்று அவளிடம் கேட்டதும், அவளோ தனக்கு நேரமாகி விட்டது எனக் கூறி விட்டு வயலுக்குச் ஓடிச் சென்று விட்டாள். அதனால் முருகனும் தனது சகோதரர் வினாயகரை அழைத்து ஒரு யானை உருவில் சென்று அவள் பின்னால் நிற்குமாறு கூறினார்.
திடீர் என ஒரு யானை தன் பின்னால் வந்து நிற்பதைக் கண்ட வள்ளி பயந்து அலறிக் கொண்டே முருகன் அருகில் ஓடிச் சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள அவரும் அவளை தன் உடலோடு அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்றப் பின் அவள் முன்னால் தன்னுடைய உண்மை உருவமான ஆறு தலைகள், பன்னிரண்டு கரங்களைக் காட்டியபடி மயில் மீது அமர்ந்து கொண்டு நின்றார். தான் விரும்பியக் கடவுளே தன் எதிரில் வந்து நின்றதைக் கண்டு மனம் மகிழ்ந்த வள்ளியும், தானும் திருமாலின் மகளே என்றக் கதையையும் கூறினாள்.
Old rogue Murugan
வள்ளியுடன் வயலுக்கு வந்திருந்த தோழியோ இத்தனை நேரமாகியும் குலத்துக்குச் சென்றவள் இன்னும் வரவில்லையே என பயந்து போய் நின்று இருக்க அங்கு வந்த வள்ளியிடம் அவள் தாமதமாக வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். வள்ளியும் எதோ சால்ஜாப்பைக் கூறி விட்டு உண்மையில் நடந்த கதையை மறைத்தாள்.
அவளைத் தொடர்ந்து அங்கு வேடன் உருவில் வந்த முருகனின் கண்களும், வள்ளியின் கண்களும் சங்கமித்ததைக் கண்டவள் அந்த வேடனை அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுமாறுக் கூறினாள். ஆனால் வேடன் உருவில் இருந்த முருகனோ தன்னுடையக் காதலை அவளிடம் எடுத்துக் கூறி அவர்கள் காதலுக்கு உதவியாக இருக்க அவளது துணையும் நாடினார். தேவைபட்டால் தனது பொய்க்கால் குதிரையுடன் நடனம் ஆடுபவன் போல அவர்களது கிராமத்துக்கு தான் வந்து விட்டுப் போவதாகவும் கூறினார். வள்ளியின் தோழியும் அதற்கு இணங்கினாள். அறுவடைக் காலமும் முடிந்தது. இனி தன்னால் முருகனைக் காண முடியாது என்பதை உணர்ந்து கொண்ட வள்ளியும் மனபாரத்துடன் தனது கிராமத்துக்கு கிளம்பிச் சென்றாள். அவள் திருட்டுத் தனமாக நடத்திக் கொண்டு வந்த காதல் ஒரு முடிவிற்கு வந்தது. அவளுடைய வளர்ப்புத் தாயார் அவளது முக வாட்டத்தைக் கண்டு பிடித்து விட்டாள்.
மலைப் பிரதேசத்தில் அவள் இருந்தபோது தீய ஆவி ஏதும் அவளைப் பிடித்து விட்டதா என்பதைக் கண்டறிய முருகனுக்கு பூஜை செய்து பரிகாரம் காண ஜோதிடர்களை அணுகினாள். அதற்கு இடையில் மீண்டும் வயலுக்குச் சென்று வள்ளியைத் தேடிய முருகன் அங்கு அவளைக் காணாததினால், அவளது தோழியின் உதவியைக் கொண்டு அவளைக் கண்டு பிடித்துப் பார்த்தப் பின் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
மறு நாள் வள்ளியைக் காணாத வேடத் தலைவனான நம்பி கைதேர்ந்த வேடர்களை அனுப்பி அவளை தேடிக் கண்டு பிடிக்குமாறுக் கூறினான். அவர்களும் அவளை பல இடங்களுக்கும் சென்று தேடி விட்டு முடிவாக அவளுடன் ஓடிக் கொண்டு இருந்த முருகனைக் கண்டு பிடித்து விட்டு அவர் மீது அம்புகளை வீசினார்கள். ஆனால் அவரது சேவல் எழுப்பிய கர்ஜனையினால் அவர்கள் அனைவரும் மடிந்து விழுந்தார்கள். அவர்கள் மடிந்து விழுந்ததைக் கண்ட வள்ளியும் அழுது புலம்ப முருகனும் அவளுக்கு ஆறுதல் கூறி அவளை தேற்றி அழைத்துக் கொண்டு சென்றார். வழியில் அவர்களைக் கண்ட நாரதர் முருகனிடம் ' அவர் செய்தது சரி அல்ல என்றும், அவளை அவளது பெற்றோர்களிடம் கூறி விட்டே அழைத்து வந்திருக்க வேண்டும்' என்று அறிவுறுத்த முருகனும் இறந்து போன வேடர்களை உயிர் பிழைக்க வைத்து அவர்களுக்கும் தனது சுய உருவைக் காட்டினார்.
அவர்களும் அவரை வணங்கித் துதித்தப் பின் தம்முடைய கிராமத்துக்கு அவர் வந்து தங்களுடைய இன வழக்கப்படி அவளை அவர் மணந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள அவர்களுடன் அவர் கிளம்பிச் சென்றார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து புலித்தோலை பரிசாகக் கொடுத்தார்கள். நாரதர் முன்னிலையில் முருகனின் கரங்களில் வள்ளியின் கரங்களை அவளது வளர்ப்புத் தந்தையான வேடன் நம்பி வைக்க அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக கருதப்பட்டது. அங்கிருந்து கிளம்பிச் சென்ற முருகன் சில நாட்கள் திருத்தணியில் வாழ்ந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி ஸகந்தகிரிக்குச் செல்ல அங்கு வள்ளியையும், முருகனையும் அவரது முதல் மனைவி தெய்வானை அன்புடன் வரவேற்றாள்.
இந்த உணர்ச்சியைத் தூண்டும் கதையின் ஒவ்வொரு வரிகளுமே பண்டைய காலத்தைய தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் விதத்திலேயே அமைந்து உள்ளது தெரியும். இருவரும் இணைந்த இது ஒரு அற்புதமான காவியம். கதாநாயகி மலைவாழ் மக்களிடையே பிறக்கின்றாள், பன்னிரண்டு வயதில் பரண் மீது அமர்ந்து கொண்டு வயல்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கின்றாள், அங்குதான் கடவுளின், அதாவது காதலனின் சந்திப்பும் கள்ளத்தனமான உறவும் துவங்க அதற்கு அவளுடைய தோழி உதவி செய்கிறாள், பொய்க்கால் குதிரையின் ஆட்டம், காதலின் பிரிவினால் வள்ளி அடைந்த சோகம், வள்ளியின் தாயார் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை செய்தது, வேலனின் உக்கிரத் தாண்டவம், முருகனையே வேண்டிக் கொண்டு தீய ஆவியை விரட்டச் செய்த ஏற்பாடுகள், காதலர்கள் ஓடி விட்ட சம்பவம் என அனைத்துமே தமிழர்கள் பாணியிலேயே அமைந்து உள்ளது.
தெய்வ நம்பிக்கையின் கீழ் அமைந்து உள்ள அபூர்வமான ஒரு கதை ஒரு தெய்வத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், அந்தக் கதையின் கருவை நியாயப்படுத்தும் விதத்திலும் நன்கு அமைந்து உள்ளது என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் தெய்வத்தின் அற்புதமான செயல்களைக் கூட சமூகத்தின் மன மாற்றத்துக்கு ஏற்ப வரலாற்று சிறப்பு மிக்க அற்புதமான கதையாக எழுதப்பட்டு உள்ளது.

வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த தெய்வத்தின் கதையை படிப்படியாக ஆராய்ந்து சரியான முறையில் விளக்கிக் கூறுவதும் அவசியம்.

வள்ளி

வள்ளி என்ற பெயர் திராவிடர்களின் வரலாற்றில் இருந்து வந்தது என்பது தெளிவு. பழங்காலப் பழக்கத்தின்படி வள்ளி என்றப பெயர் வள்ளிச் செடியில் இருந்தே வந்துள்ளது. இது மலை வாழ் மக்களின் மொழியான தா. மா. கா. கோட மற்றும் தீ என்பதில் இருந்தே வந்துள்ளது. அந்தச் செடியின் மேல்புறத்தில் கிளைகள் படர்ந்து இருக்க கீழே நிலத்தடியில் பெருத்து வளரும் வள்ளிக் கிழங்கின் செடி பாழடைந்த பூமியில் வளரும் ஒன்று. இது பற்றிய செய்தி கி .பி 140 - 200 ரில் கபிலர் வாழ்ந்த குறிஞ்சியில் உள்ள குறிஞ்சிப் பட்டு என்றப பகுதியில் வளரும் 99 விதமான செடி கொடிகளின் பெயர்களில் உள்ளது.
பண்டைய தமிழ் நூல்களில் அந்த கிழங்குச் செடியின் பெயரில் அமைந்து இருந்த வள்ளி என்றப பெயர் 18 இடங்களில் கூறப்பட்டு உள்ளது. இது நிச்சயமாக திராவிட இயக்க நூல்களில் இருந்தே வந்திருக்க வேண்டும். ஏன் எனில் ஆர்ய வரலாற்றைக் குறிப்பிடும் சம்ஸ்கிருத மொழி நூல்களில் வெகு காலத்துக்குப் பின்னர்தான் வள்ளி எனும் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புராணக் கதையின்படி வள்ளிக் கிழங்கை தோண்டி எடுத்து கொண்டு இருந்தபோது குழந்தை கிடைத்ததினால் அவளுக்கு வள்ளி என்ற பெயரினை வைத்தார்கள். வள்ளிச் செடியைப் பற்றிய செய்தி அகம் 52.1 மற்றும் 286.2, புறம் 316.9, நார் 269.7 மற்றும் பரிபா 21.10 லும் , வள்ளிக் கிழங்கு பற்றி புக் 109.6 மற்றும் கல 39.12 லும் என்குர் 250 முக்கிய செய்தியாகக் கூறப்பட்டு இருந்தாலும் வள்ளிச் செடி பற்றியும் மேலும் முருகன் வழிபாடு பற்றியும் கூறப்பட்டு உள்ளன. ஆறாம் நூற்றாண்டு மற்றும் பக்தி நெறிகள் தோன்றப்படும் காலத்துக்கு முன்பாக எழுதப்பட்டு உள்ள ஏழு நூல்களில்தான் வள்ளி என்பவள் முருகனின் காதலி என்றும் அவளே அவருடைய மனைவி என்றும் கூறப்பட்டு உள்ளது. அவர்களைப் பற்றியக் குறிப்பு நாரா 82.4, திரு முருக 102, பராப் 8.69, 9.8, 9.67 மற்றும் 14.22 லும் சிலப் 24.3 போன்றவற்றில் உள்ளன.
இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த நாரினை 82.4 என்ற மிகப் பழமையான தமிழ் நூலில் குறிஞ்சி என்ற நூலில் அஹம் என்ற பாடலில் உள்ள வரிகள் இவை - 'நீயோ என்னுள் வருதியோ, நலனடக்கோடிச்சி முருகுபுணர்ந்து இயன்ற வள்ளிபோல'. இதன் அர்த்தம் என்ன என்றால் 'ஹே..... பெண்ணே அழகு சொட்டும் மலைப் பெண்ணான நீ முருகனிடம் மகிழ்ச்சியோடு சென்ற வள்ளி போல என்னிடம் வருவாயா' என்பதே. பாலுணர்வை தூண்டும் வகையில் கதாநாயகன் அந்தப் பெண்ணை தன்னுடன் புணரும்படி -முருகுபுணர்ந்து வள்ளி- அதாவது ஆண் பெண் உறவுக்கு அழைப்பது போல அழைக்கின்றான். ஆகவே இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் வள்ளி- முருகன் இடையில் ஏற்பட்ட காதலை அறிந்து இருந்தவர்கள் பால் உணர்வைப் பற்றி நன்கே அறிந்து இருந்தார்கள். அதை மனிதர்களுக்கு ஒரு படிப்பினையாக சொல்லவும், கவிஞர்களின் கவித் திறனுக்கு பொருள் தரவும் பயன் படுத்தி உள்ளார்கள். இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இந்தக் கதையைப் பற்றி தெரிந்து இருந்தாலும் சமிஸ்கிருத காவியங்கள் மற்றும் வடநாட்டில் இருந்த எந்த நூலிலும் வள்ளி பற்றிய செய்தி குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதே.

திருமுருகாற்றுப் படை

பல காலத்துக்குப் பிறகு எழுதப்பட்டுள்ள திருமுருகாற்றுப் படை என்ற நூல் மற்றவற்றை விட மாறுபட்ட நூலாகும். இது கவிநயம் மிக்க நூலாக மட்டும் அல்ல இலக்கியங்களில் முதன் முறையாக முருகனை கடவுள் எனத் துதிக்கும் வகையிலான நூலாகவே இருந்தது.
திருமுருகாற்றுப் படையில் வள்ளியை கபடமற்ற மலை வாழ் பெண்ணாகவே கூறி அவளுக்கு கொடி போன்ற இடை இருந்ததாகவும், அவளை சாந்தமான முகத்துடன் முருகன் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் எழுதப்பட்டு உள்ளது. திருமுருகாற்றுப் படையில் முதன் முறையாக சமிஸ்கிருத நூல்களில் கூறப்பட்டு உள்ள ஸ்கந்த முருகனைப் பற்றி மறைமுகமாக எழுதப்பட்டு உள்ளது. அதில் பிராமண குல வழக்கப்படி நடத்தப்படும் திருமணங்களைப் பற்றி கூறியப் பின் தேவசேனாவின் (தெய்வானையின்) கற்பைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. தேவசேனா செய்து கொண்ட திருமணம் வைதீக முறையிலான முறையில் அமைந்து இருக்க வள்ளியின் திருமணமோ ஆரியர்களின் காலத்துக்கு முற்பட்ட காதல் திருமணமாக, ஆச்சார, வைதீகமற்ற முறையில் நடந்த திருமணம் என்கின்றது. உண்மையில் வள்ளி- முருகன் இவருடையக் காதலும் திருமணத்துக்கு முன்னர் தோன்றிய காதலினால் இணைந்தவர்கள் என்றும் மிகப் புராதான காலத்தில் எழுதப்பட்டு உள்ள உண்மையானக் கதையின் நாயகர்கள் என்றும் நினைக்க வேண்டி உள்ளது.